டெலாய்ட் அரசாங்கத் தகவல் நுண்ணறிவு மையத்தால், 'அரசின் போக்குகள்' என்ற ஒரு அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கையின் ஒருங்கிணைந்தக் கருத்துரு, ‘dissolving boundaries' என்பதாகும்.
சாமானியக் குடிமகனுக்கானத் தீர்வுகளை அரசாங்கங்கள் எவ்வாறு வழங்குகின்றன என்பதை மாற்றியமைக்கச் செய்கின்ற ஒன்பதுப் போக்குகளை இந்த அறிக்கை எடுத்து உரைக்கிறது.
கோவிட்-19 பெருந்தொற்றானது, பல்வேறுத் துறைகள் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதில் ஒரு முக்கிய ஊக்கியாக இருந்தது.
இந்த ஒன்பதுப் போக்குகளில், ஐந்து போக்குகள் மாற்றம் உண்டாக்கக் கூடியவை, அதாவது முக்கியத் துறைகளில் உள்ள தடைகளை அகற்ற அரசாங்கங்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன.
மீதமுள்ள நான்குப் போக்குகள் குறிப்பிட்டத் துறை சார்ந்த கவனம் செலுத்தக் கூடியப் போக்குகளாக உள்ளன.