மக்களவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு (123வது திருத்தம்) மசோதா, 2017 என்ற மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.
இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா தேசிய பட்டியலிடப்பட்டோர் ஆணையம் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையத்திற்கு நிகராக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க எண்ணுகிறது.
இம்மசோதாவானது
தேசிய பட்டியலிடப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் அதிகாரத்தை ரத்து செய்கின்றது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை கொண்டதாகவும், அவர்களது பதவிக்காலம் மற்றும் பணி நிபந்தனைகள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிடுகின்றது.
அரசியலமைப்பில் புதிய ஷரத்து 338-B ஐ சேர்ப்பதன் மூலம் அரசியலமைப்பு அமைப்பு அந்தஸ்தை அளிக்க எண்ணுகிறது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு எந்தவொரு புகார்களையும் விசாரிக்கும் வண்ணம் உரிமையியல் நீதி மன்றத்திற்கு உண்டான அதிகாரங்களை வழங்குகின்றது.