TNPSC Thervupettagam

அரசியலமைப்பு (123வது திருத்தம்) மசோதா 2017

August 4 , 2018 2310 days 884 0
  • மக்களவை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு (123வது திருத்தம்) மசோதா, 2017 என்ற மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது.
  • இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா தேசிய பட்டியலிடப்பட்டோர் ஆணையம் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையத்திற்கு நிகராக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க எண்ணுகிறது.
  • இம்மசோதாவானது
    • தேசிய பட்டியலிடப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் அதிகாரத்தை ரத்து செய்கின்றது.
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களை கொண்டதாகவும், அவர்களது பதவிக்காலம் மற்றும் பணி நிபந்தனைகள் அனைத்தும் குடியரசுத் தலைவரால் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிடுகின்றது.
    • அரசியலமைப்பில் புதிய ஷரத்து 338-B ஐ சேர்ப்பதன் மூலம் அரசியலமைப்பு அமைப்பு அந்தஸ்தை அளிக்க எண்ணுகிறது.
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு எந்தவொரு புகார்களையும் விசாரிக்கும் வண்ணம் உரிமையியல் நீதி மன்றத்திற்கு உண்டான அதிகாரங்களை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்