உச்ச நீதிமன்றம் ஆனது, அரசியலமைப்பு அமர்வின் தீர்ப்பு குறைவான நீதிபதிகள் கொண்ட அமர்வுகளின் மீதும் "கட்டுப்பட்டதாக" இருக்கும்.
ஹரியானாவில் நிலச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரம்பில் அசல் உரிமையாளர்களிடமிருந்துப் பறிக்கப்பட்ட நிலத்தின் மீது பஞ்சாயத்து அமைப்பு உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உரிமையாளரிடம் இருந்து பறிக்கப்பட்டு உரிமை கோர முடியாமல் உள்ள நிலத்தை மட்டுமே பஞ்சாயத்துகள் நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, 1961 ஆம் ஆண்டு ஹரியானா கிராமப் பொது நிலங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2 (g) பிரிவின் 6வது துணைப் பிரிவின் சட்டப்பூர்வத் தன்மையை ஆய்வு செய்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வின் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டுக் குழுவின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தது.