TNPSC Thervupettagam

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகள் 2022-23

January 14 , 2025 5 days 33 0
  • பிராந்திய அரசியல் கட்சிகள் ஆனது 2022-23 ஆம் நிதியாண்டில் 2,119 நன்கொடைகள் மூலம் சுமார் 217 கோடி ரூபாயைப் பெற்றதாக அறிவித்துள்ளன.
  • ஒட்டு மொத்த நன்கொடைத் தொகையில் சுமார் 71% ஆன 154 கோடி ரூபாயை பாரத இராஷ்டிர சமிதி (BRS) பெற்றது.
  • நன்கொடைகளில் சுமார் 90% நன்கொடைகளை - 196 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை BRS, YSR-காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி (TDP), திராவிட முன்னேற்றக் கழகம் (DMK), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய ஐந்து மிகவும் முக்கியப் பிராந்தியக் கட்சிகள் பெற்றன.
  • இவற்றில், BRS, TDP, DMK மற்றும் CPI ஆகியவை தங்கள் நன்கொடைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அறிவித்த அதே நேரத்தில் YSR-காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடை ஆனது 2021-22 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக அறிவித்தன.
  • 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினால் பெறப்பட்ட நன்கொடைகளில் மிகப்பெரிய அளவில் 3685% வளர்ச்சி பதிவாகியுள்ளது என்பதோடு இது பிராந்தியக் கட்சிகளில் மிக அதிக சதவீத அதிகரிப்பாகும்.
  • அதைத் தொடர்ந்து ஜன்நாயக் ஜனதா கட்சி (1997%), TDP (1795%) ஆகியவை உள்ளன.
  • மாநிலங்களில், கேரளாவைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் அதிகபட்சமாக சுமார் 9.09 லட்சம் ரூபாய் ரொக்க நன்கொடைகளை வழங்கினர், அதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் சுமார் 5.91 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்