ஹரியானா மாநில அரசானது மாநிலத்தின் அனைத்து ஆண் அரசு ஊழியர்களுக்கும் தங்களுடைய மனைவியரின் மகப்பேறு காலத்திற்காக 15 நாள் தந்தைமரபு வழி விடுப்பை (Paternity leave) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் தனது ஊழியர்களுக்கு தந்தைமரபு வழி விடுப்பினை வழங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சதவ் பாராளுமன்றத்தில் தந்தைமரபு வழி மகப்பேறு நலன் மசோதா-2017 (Paternity Benefit Bill) எனும் தனிநபர் மசோதாவை (Private Member Bill) அறிமுகப்படுத்தினார்.
தந்தை மகப்பேறு நலன் மசோதா – 2017 னுடைய வரைவின் படி, ஆண் அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை தந்தைமரபு வழி மகப்பேறு விடுமுறையைப் பெறுவர்.
தற்சமயம் அனைத்திந்திய மற்றும் மத்திய குடிமைப் பணி விதிகள் (All India and Central Civil Services Rules) மட்டுமே மத்திய அரசு ஊழியர்களை 15 நாட்கள் தந்தைமரபு வழி மகப்பேறு விடுமுறையை எடுக்க அனுமதி வழங்குகின்றது.