TNPSC Thervupettagam

அரசு ஊழியர்களுக்கான தந்தை மரபுவழி விடுப்பு

June 10 , 2018 2232 days 1069 0
  • ஹரியானா மாநில அரசானது மாநிலத்தின் அனைத்து ஆண் அரசு ஊழியர்களுக்கும் தங்களுடைய மனைவியரின் மகப்பேறு காலத்திற்காக 15 நாள் தந்தைமரபு வழி விடுப்பை (Paternity leave) அறிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்பின் மூலம் தனது ஊழியர்களுக்கு தந்தைமரபு வழி விடுப்பினை வழங்கியுள்ள இந்தியாவின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சதவ் பாராளுமன்றத்தில் தந்தைமரபு வழி மகப்பேறு நலன் மசோதா-2017 (Paternity Benefit Bill) எனும் தனிநபர் மசோதாவை (Private Member Bill) அறிமுகப்படுத்தினார்.
  • தந்தை மகப்பேறு நலன் மசோதா – 2017 னுடைய வரைவின் படி, ஆண் அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை தந்தைமரபு வழி மகப்பேறு விடுமுறையைப் பெறுவர்.
  • தற்சமயம் அனைத்திந்திய மற்றும் மத்திய குடிமைப் பணி விதிகள் (All India and Central Civil Services Rules) மட்டுமே மத்திய அரசு ஊழியர்களை 15 நாட்கள் தந்தைமரபு வழி மகப்பேறு விடுமுறையை எடுக்க அனுமதி வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்