அரசு சில சீன இரும்புப்பொருட்கள் மீது எதிர்த்தடுப்பு வரியை (Countervailing duty) விதித்துள்ளது
September 9 , 2017 2679 days 959 0
அரசு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சில பட்டையான இரும்புப் பொருட்கள் மீது ஐந்து வருட காலத்திற்கு எதிர்த்தடுப்பு வரியை விதித்துள்ளது. இம்மாதிரியான, ஏற்றுமதி செய்யும் நாடுகளால் அதிகம் மானியமளிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வரிவிதிக்கும் முடிவு நிதி அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது. எதிர்க்குவிப்பு வரிகள் மற்றும் துணை வரிகளின் தலைமை இயக்குனரகம் தேவையான அளவு உற்பத்தியும் தேவையும் இந்தியாவில் உள்ளபோதிலும், சீனாவால் மானியமளிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியின் விளைவாக பாதிப்புகள் நிகழ்வதை கண்டுபிடித்தது. அதற்குப் பின்னர் நிதி அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
எதிர்த்தடுப்புவரிஎன்றால்என்ன?
எதிர்த்தடுப்பு வரி என்பது இறக்குமதி செய்யும் நாடுகளால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் ஒரு கூடுதல் இறக்குமதி வரியாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி சலுகைகள் மற்றும் வரிச் சலுகைகளை உற்பத்தி செய்யுமிடத்திலோ அல்லது ஏற்றுமதி செய்யும் இடத்திலோ அடையும் பொழுது அதன்மீது இந்தவகை வரி விதிக்கப்படும்.