TNPSC Thervupettagam

அரசுக் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான வலைதளம் & செல்லிடப் பேசி பயன்பாடு

October 14 , 2019 1872 days 629 0
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி, “m-ஹரியாலி” என்ற புதிய செல்லிடப் பேசி பயன்பாட்டையும், “அரசுக் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு” என்ற வலைதளத்தையும் புதுதில்லியில் அறிமுகப் படுத்தினார்.
  • இது மக்களை மரங்கள் நட்டு வளர்ப்பதற்கும் பசுமை இயக்கங்கள் வழி நடப்பதற்கும் ஊக்குவிக்கிறது.
  • இது தாவரங்களில் தானியங்கிப் புவிக் குறியீட்டை வழங்குகிறது. இது  பயனர்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு உகந்த வகையில் இருக்கின்றது. மேலும் இது எந்த ஆண்ட்ராய்டு   வசதி கொண்ட செல்லிடப் பேசியிலும் வேலை செய்கிறது.
  • செயலி  மற்றும் வலைதளம் ஆகிய இரண்டையும் தேசியத்  தகவல் மையம் & வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இணைந்து  உருவாக்கியுள்ளது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பற்றிய எந்தவொருத்  தகவலையும் பொதுமக்கள் இவைகளில் பதிவேற்றலாம். அவை www.epgc.gov.in என்ற இணையதளத்தில் காண்பிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்