TNPSC Thervupettagam

அரசுத் தொழிலாளர் காப்பீடு

June 15 , 2019 1992 days 720 0
  • அரசுத் தொழிலாளர் காப்பீட்டு (Employees State Insurance - ESI) சட்டத்தின் கீழ், தனது பங்களிப்பை 6.5 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அரசு குறைத்துள்ளது.
  • பணியளிப்பவர்களின் பங்களிப்பு 4.75 சதவிகிதத்திலிருந்து 3.25 சதவிகிதமாகக் குறைக்கப்படுகின்றது.
  • தொழிலாளர்களின் பங்களிப்பு 1.75 சதவிகிதத்திலிருந்து 0.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுகின்றது.
  • இது 3.6 கோடி தொழிலாளர்களுக்கும் 12.85 இலட்சம் பணியளிப்பவர்களுக்கும் பயன்படவிருக்கின்றது.
  • இந்தக் குறைக்கப்பட்ட பங்களிப்பு விகிதமானது ESI திட்டத்தின்கீழ் அதிகப் பணியாளர்களையும் முறைசார் துறையில் அதிக தொழிலாளர்களையும் கொண்டு வரவிருக்கின்றது.
ESI
  • 1948 ஆம் ஆண்டின் ESI சட்டமானது காப்பீடு செய்யப்பட்ட நபர்களுக்கு மருத்துவம், நிதி, மகப்பேறு, மாற்றுத் திறன் மற்றும் பிறரைச் சார்ந்துள்ளவர்கள் ஆகியோர்களுக்குப் பயன்களை அளிக்கின்றது.
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் இந்திய அரசு ESI சட்டத்தின் கீழ் பங்களிப்பு விகிதத்தை நிர்ணயிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்