முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திறனறித் தேர்வுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
பத்தாம் வகுப்பில் பயிலும் 1,000 மாணவர்கள் (500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள்) இந்தத் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித் தொகை அவர்களுக்கு வழங்கப் படும்.
இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பின் போது ஆண்டுதோறும் ரூ.12,000 உதவித் தொகையாகப் பெறுவார்கள்.
இந்த முன்னெடுப்பின் கீழ், சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது மாநிலத்தின் கிராமப்புறங்களில் பயிலும் ஒரு லட்சம் மாணவர்களை ஒன்றிணைக்கும்.
'அனைவருக்கும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக கல்வி' முன்னெடுப்பின் ஒரு பகுதியான, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் குறித்த இந்த விரிவாக்கத் திட்டமானது மாணவர்களை குறைகடத்தி போன்ற தொழில்நுட்பங்களில் தங்களது தொழில்முறை கல்வியினை மேற்கொள்ளச் செய்வதை ஊக்குவிப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.