சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி GSAP 1.0 எனப்படும் அரசுப் பிணையங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை (Government Security Acquisition Programme) அறிவித்து உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ரூ.1 டிரில்லியன் மதிப்பிலான (அல்லது ஒரு லட்சம் கோடி ரூபாய்) அரசுப் பத்திரங்களை மத்திய வங்கி வாங்கிக் கொள்ளும்.
முதலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான கையகப்படுத்துதலானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று மேற்கொள்ளப்படும்.
GSAP 1.0 திட்டம் பத்திரச் சந்தைக்கு மிக அதிக ஆதரவினை அளிக்கும்.
இந்த ஆண்டு அரசின் கடன் வாங்குதல் (borrowing) அதிகரித்ததால் இந்தியச் சந்தையில் எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும்.