கேரள மாநிலத்தின் கொல்லம் முதல் கோவா மாநிலம் வரையில், இந்திய மீன்வள ஆய்வு நிறுவனம் ஆனது ஒரு விசை மீன்பிடிப் படகைப் பயன்படுத்தி, சுமார் 540 மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் பகுதிகளை நன்கு ஆய்வு செய்வதற்காக ஆழ்கடல் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டது.
இது அரபிக் கடலில் பல அதிக உற்பத்தித் திறன் கொண்ட, இதுவரையில் எந்தவிதச் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படாத மீன்பிடித் தளங்களை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தளங்கள் ஆனது, இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து சுமார் 100 -120 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளன.
இந்தப் பகுதியானது, ஒரு பகுதிக்கான ஒரு மீன்பிடி முயற்சிக்கு (CPUE) மணிக்கு 150-300 கிலோ என்ற அளவிலான சராசரி மீன்பிடிப்பு திறனைக் கொண்டுள்ளது.