கலை மற்றும் பொழுது போக்கு மீதான தன்னுடைய பழமையான கடும் கொள்கைப் போக்கை கைவிடுத்து முதல்முறையாக அரபு ஆடை அலங்கார அணிவகுப்பு வாரத்தை சவூதி அரேபியா முதன் முறையாக நடத்த உள்ளது.
மார்ச் மாதத்தின் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சவூதி தலைநகர் ரியாத்தில் இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு வாரத்தை நடத்த உள்ளதாக துபாயை தலைமையிடமாகக் கொண்ட அரபு ஆடை அலங்கார குழு அறிவித்துள்ளது.
மேலும் இதன் இரண்டாவது பதிப்பு அக்டோபர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாரிஸ் மற்றும் மிலன் ஆடை அலங்காரக் கண்காட்சி போலவே இதுவும் சர்வதேச பேஷன் கண்காட்சி வாரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் அரபு ஆடை அலங்கார வாரம் துபாய் நாட்டினால் பிரத்தியேகமாக நடத்தப்பட்டு வந்தது.