1960 ஆம் ஆண்டுகளின் ஆரம்பகாலம் வரையில் உலகின் நான்காவது பெரிய ஏரியாக இருந்த அரல் கடல் வறண்டு விட்டது.
அரல் கடல் வறண்டு வருவதால் கடந்த 30 ஆண்டுகளாக மத்திய ஆசியா 7 சதவீதம் தூசுப் படலம் நிறைந்துள்ளதாக மாறியுள்ளது.
அரல்கும் பாலைவனம் ஆனது தற்போது புவியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிக முக்கியமான தூசுப்படல மூலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
1985 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், விரிவடைந்து வரும் பாலை வனத்தில் இருந்து வெளியாகும் தூசு 14 டன்னிலிருந்து கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 27 மில்லியன் டன்கள் ஆக அதிகரித்துள்ளது.
மத்திய ஆசியாவின் இரண்டு பெரிய நதிகளான அமு தர்யா (பழங்காலத்தில் ஆக்ஸஸ்) மற்றும் சிர் தர்யா (ஜாக்ஸார்ட்ஸ்) ஆகியவை அரல் கடலில் கலந்தன.
உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய ஏழு மத்திய ஆசிய நாடுகளில் அதன் நதிப் படுகை பரவியுள்ளது.