TNPSC Thervupettagam

அரிசி கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதி

April 14 , 2024 96 days 164 0
  • இந்திய அரசானது, 2022-23 ஆம் ஆண்டின் (அக்டோபர்-செப்டம்பர்) சந்தைப்படுத்தல் காலகட்டத்திற்காக ஐந்தாவது முறையாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) நெல் கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதியை செயல் படுத்தியுள்ளது.
  • இந்தியாவில் நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிர்ணயிக்கப் பட்ட மானிய வரம்பு மீறப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிசி உற்பத்தியின் மதிப்பு சுமார் 52.8 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு 6.39 பில்லியன் டாலர் மதிப்பிலான மானியம் வழங்கப்பட்டது.
  • அதாவது அரிசி மீதான மானியம் ஆனது அதன் உற்பத்தி மதிப்பில் 12 சதவீதமாக இருந்தது என்ற நிலையில் இதன் மூலம் 10 சதவீதம் என்ற உள்நாட்டு மானிய வழங்கலுக்கான உச்ச வரம்பு மீறப்பட்டது.
  • இருப்பினும், 2013 ஆம் ஆண்டில் WTO அமைப்பின் பாலி அமைச்சர்கள் சபையில் ஒப்புக் கொள்ளப் பட்ட "நெல் கொள்முதலுக்கான மானிய வரம்பு மீறல் மீதான நடவடிக்கை தடுப்பு விதி- சமாதான விதியை" இந்தியா செயல்படுத்தியதால், அந்த மீறலுக்கு உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
  • இது வளர்ந்து வரும் நாடுகளில் கோதுமை மற்றும் அரிசி கொள்முதலுக்கான உச்ச வரம்பை மீறுவதால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருந்து, அத்தகையப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் வரையில் அவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்