TNPSC Thervupettagam

அரிசியின் நேரடி விதைப்பு

June 11 , 2020 1632 days 662 0
  • பஞ்சாப் மாநில அரசானது இந்த ஆண்டில் நெல்லின் பாரம்பரிய நடவு முறைக்குப் பதிலாக அரிசியின் நேரடி விதைத்தல் முறையை (DSR - Direct seeding of rice) பின்பற்ற முடிவு செய்துள்ளது.
  • புதிய கொரானா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டதையடுத்துத் தொடர்ந்த  தலைகீழ் இடப்பெயர்வினால் ஏற்பட்ட வேளாண் தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
  • DSRன் கீழ், முளைவிடப் படாத விதைகள் இழுவை இயந்திரத்தினால் செயல்படும் ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி நேரடியாக நிலத்தில் நடுவதற்குச் செலுத்தப் படுகின்றது.
  • இந்த முறையில் எந்தவொரு நாற்றுப் பண்ணைத் தயாரிப்புகளும் அல்லது அதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப் படுவதில்லை.
  • நெல்லை நிலத்தினுள் நடும் போது விவசாயிகள் நெல்லை முதலில் உழுது, பிறகு சிறு தாவரங்களாக வளரச் செய்யும் நடைமுறையைப் பின்பற்றுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்