மதுரை மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க உரிமையை வழங்குவதை ரத்து செய்யுமாறு தமிழக அரசானது மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மதுரையில் அரிட்டாபட்டி உட்பட ஆறு கிராமங்களை உள்ளடக்கிய நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியின் முன் மதிப்பிடப்பட்ட ஒரு ஏலதாரராக இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினைச் சுரங்கத் துறை அமைச்சகம் அறிவித்தது.
ஓர் அறிவிக்கப்பட்ட பல்லுயிர்ப்பெருக்க பாரம்பரிய தளமான இது குகை கோவில்கள், சிற்பங்கள், சமணச் சின்ன அடையாளங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்ச பாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்குப் பிரபலமானது.