2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி என்பது அரிதான வியாதிகளுக்காக ஐரோப்பிய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்படும் 12-வது சர்வதேச அரிதான நோய் தினம் ஆகும்.
அரிதான நோய் தினம் என்பது இவ்வகையான அரிதான நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் கடைசி தினம் அன்று அனுசரிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டிற்கான அரிதான வியாதி தினத்தின் கருத்துரு, “சுகாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் இணைத்தல்” என்பதாகும்.
இத்தினம் முதலில் EURORDIS (European Organisation for Rare Diseases) அமைப்பு மற்றும் அதன் தேசிய கூட்டாளிகளின் குழுவால் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி முதல் அரிதான வியாதி தினம் அனுசரிக்கப்பட்டது.