அரிமான தடுப்புத் திறன் கொண்ட நிக்கல் உலோகக் கலவை முலாம்
January 23 , 2023 675 days 313 0
பொறியியல் சார்ந்தப் பயன்பாடுகளில் அதிக செயல்திறன் கொண்ட பொருட்களின் மீது நிக்கல் உலோகக் கலவைப் பூச்சுகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு புதிய முறையானது கண்டறியப்பட்டுள்ளது.
இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான குரோம் முலாம் பூச்சு முறைக்கான ஒரு மாற்றாக அமையும்.
இந்த முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பூச்சுகள் அரிமானத்தினை எதிர்க்கும் திறனை அதிகளவில் கொண்டதாகும் என்பதோடு மேலும், இது நெகிழிப் பொருட்கள் தொழில்துறைக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தச் செயல்முறையானது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிக்கல் மற்றும் டங்ஸ்டன் அயனிகளைக் கொண்ட, தனிம டங்ஸ்டன் (W) மற்றும் நிக்கல் (Ni) ஆகியவற்றை வலுப் படுத்துவதற்கான ஒரு மூலப்பொருளாக விளங்குகின்ற மின்பகுளிகளைக் கொண்டு உள்ளது.