பூச்சியியல் வல்லுநர்கள் ஓனிடிஸ் விஸ்தாரா என்ற புதிய வகை சாண வண்டுகளைக் கண்டறிந்துள்ளனர்.
ஓனிடிஸ் என்பது ஆப்ரோட்ரோபிகல், ஓரியண்டல் மற்றும் பாலேர்க்டிக் பகுதிகளில் காணப் படும் சாண வண்டுகளின் அரிதான இனமாகும்.
மூன்று புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, உலகளவில் 176 வகையான ஓனிடிஸ் மட்டுமே பதிவாகியிருந்தன.
இந்த இனத்தின் அனைத்து இனங்களும் குழி பறிக்கும் இனங்களாகும் என்ற வகையில் அதாவது அவை அவற்றின் லார்வாக்களுக்கு உணவை வழங்குவதற்காக அதிக அளவு கால்நடைகளின் சாணத்தை மண்ணின் அடியில் புதைக்கின்றன.