லடாக்கில் உள்ள ஹான்லே மற்றும் மெராக் ஆய்வகங்கள் இந்தியாவில் அசாதாரணமான ஓர் அடர்ந்த சிவப்பு நிற துருவ மின்னொளி நிகழ்வைக் கண்டறிந்து உள்ளன.
துருவ மின்னொளிகள் என்பது, சூரியனால் வெளியேற்றப்படும் துகள்கள் பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது வானத்தில் தோன்றும் பிரகாசமான ஒளி வடிவங்கள் ஆகும்.
இந்த நிகழ்வு பொதுவாக துருவப் பகுதிகளுக்கு அருகில்தான் புலப்படும்.
இந்த ஆண்டு ஹான்லே ஆய்வகத்தால் கண்டறியப்பட்ட இரண்டாவது துருவ மின்னொளி நிகழ்வு இதுவாகும்.