இந்தியா மற்றும் தாய்லாந்தில் டார்வின் குளவியின் துணைக் குடும்பமான மைக்ரோ லெப்டினேவினை (ஹைமனோப்டெரா:இச்நியுமோனிடே) சேர்ந்த ஐந்து புதிய குளவி இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டார்வின் குளவிகள் ஒட்டுண்ணி குளவிகள் ஆகும் என்பதோடு அவற்றின் லார்வாக்கள் அதன் ஓம்புயிரியின் உள்ளே இருந்து உணவினை பெற்றுக் கொள்ளும்.
இந்தியாவில் இந்த துணைக் குடும்பத்தின் இனங்கள் கண்டறியப்படுவது இது முதல் முறையாகும்.
இச்நியுமோனிடே வகை குடும்பமானது, 42 துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இதில் மைக்ரோலெப்டினே மிகச்சிறிய ஒன்றாகும்.
இது உலகளவில் முன்னர் அறியப்பட்ட 14 இனங்களைக் கொண்ட மைக்ரோலெப்டெஸ் என்ற ஒற்றை இனத்தைக் கொண்டுள்ளது.
தற்போது வரையில், 1998 ஆம் ஆண்டில் மியான்மரில் பதிவாகிய மைக்ரோலெப்டெஸ் மலைசெய், கிழக்கத்தியப் பகுதியில் அறியப்பட்ட ஒரே இனமாகும்.
இந்தியாவில் பதிவான நான்கு புதிய இனங்களில், மைக்ரோலெப்ட்ஸ் சியானி வகை இனமானது தமிழ்நாட்டின் களக்காடு - முண்டந்துறை புலிகள் வளங்காப்பகத்தில் (KMTR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதர மற்ற 3 இனங்களான மைக்ரோலெப்டெஸ் கௌரிசங்கரி, மைக்ரோலெப்ட்ஸ் சந்தேஷ்கதுரி மற்றும் மைக்ரோலெப்டெஸ் டெஹ்ரியென்சிஸ் ஆகியனவாகும்.