TNPSC Thervupettagam

அரிய நோய்களைக் குணப்படுத்தும் இனம்சார் மருந்துகள்

December 9 , 2023 353 days 281 0
  • இந்தியாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது நான்கு அரிய நோய்களுக்கு  சிகிச்சையளிக்க இனம்சார் (ஜெனரிக்) மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அவை டைரோசினீமியா-வகை 1, கௌச்சர் நோய், வில்சன் நோய் மற்றும் டிராவெட்-லெனாக்ஸ் காஸ்டாட் நோய்க்குறி ஆகிய 4 நோய்கள் ஆகும்.
  • முதன்முறையாக அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கும் சிறப்பு முயற்சி இதுவாகும்.
  • 13 அரிதான நோய்கள் மற்றும் கதிர் அரிவாள் செல் நோய்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
  • அரியவகை நோய் என்பது ஒரு சிறிய எண்ணிக்கையிலான அளவில் மக்களைப் பாதிக்கின்ற, குறிப்பாக குறைவாக பரவி உள்ள ஒரு சுகாதாரக் குறைவு நிலை ஆகும்.
  • தற்போது, எட்டு வகையான இனம்சார் மருந்துகள் உள்ள நிலையில் அவற்றில், நான்கு வகையான மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன என்பதோடு, மேலும் நான்கு வகையான மருந்துகள் அடுத்த ஆண்டு கிடைக்கப் பெறும்.
  • இனம்சார் மருந்துகள் என்பது செயலில் உள்ள பொருட்கள், அதன் அளவு, பாதுகாப்பு, வலிமை, தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனப் பெயர் கொண்ட அல்லது காப்புரிமை மருந்துகளுக்குச் இணையான மருந்துகளாகும்.
  • இவை பொதுவாக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
  • ஒரு நிறுவனப் பெயர் கொண்ட மருந்துக்கான காப்புரிமைப் பாதுகாப்பு காலம் காலாவதியானதும், பிற மருந்து நிறுவனங்கள் இந்த இனம்சார் பதிப்புகளைத் தயாரித்து விற்கலாம்.
  • நான்கு அரிய நோய்களுக்கான இந்த இனம்சார் மருந்துகளின் விலை, நிறுவன மருந்துகளின் தற்போதையச் சந்தை மதிப்பை விட 100 மடங்கு குறைவாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்