இத்தினமானது, பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளிலோ அல்லது முந்தைய நாளிலோ அனுசரிக்கப்படுகிறது.
அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒன்றிணைத்து அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரிய நோயின் பாதிப்பு விகிதம் ஆனது 10,000 பேருக்கு 6.5-10க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்திய அரிய நோய்களுக்கான அமைப்பு (ORDI) ஆனது, 5,000 இந்தியர்களில் ஒருவரை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலான நபர்களைப் பாதித்தால் அது மிக அரிய நோயாகக் கருதுகிறது.
ORDI ஆனது இந்தியாவில் 263 அரிய நோய்களைப் பட்டியலிட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "More than you can imagine; an anthology of rare experiences" என்பதாகும்.