TNPSC Thervupettagam

அரிய நோய்ப் பாதிப்பு உள்ள நபர்கள்

September 13 , 2023 313 days 211 0
  • 300 மில்லியன் மக்களைப் பாதித்து வரும் சுமார் 7,000 அரிய வகை நோய்கள் தற்போது இருப்பதாக உலகளாவிய ஆய்வு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
  • எக்ஸ்ட்ராபோலேஷன் (பொதுக் கணிப்பு) மூலம், இந்தியாவில் இந்த வகை நோய்கள் 70 மில்லியன் வரை இருக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இருப்பினும், இதுவரை இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கைகள் 500க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளன.
  • இந்த அரிய வகை நோய்கள் எந்த எந்த சமூகங்களில் ஏற்படுகின்றன என்பது குறித்த போதுமான தொற்றுநோயியல் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை.
  • இந்தக் கோளாறுகளின் பாதிப்புகளை உறுதிப்படுத்துவதற்கு அதிநவீன மருத்துவ துறை சார் கருவிகள் தேவைப்படுகின்றன.
  • நமது நாட்டில் நிலவும் இந்த அரிய வகை நோய்களுள் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் (அதிக பட்ச வியர்வை சுரப்பு), ஹீமோபிலியா (இரத்தம் உறையாமை), லைசோசோமால் சேமிப்பு உறுப்பு கோளாறுகள், அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை போன்றவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்