இரவு நேரங்களில் மட்டும் உலவக் கூடியதும் காண்பதற்கு அரியதுமான மதராஸ் முள்ளம்பன்றியானது (பாராசினாஸ் நுடிவெண்ட்ரீஸ்) தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தடைசெய்யப்பட்ட புவியியல் வரம்பில் மட்டுமே இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த இனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வாழ்விடங்களின் நிலை பற்றி இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
IUCN அமைப்பானது இதனை "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" ஆக வகைப் படுத்தி உள்ளது.
மேற்கு மற்றும் தென் தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலையானது இந்த இனங்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
கூடுதலாக, கொரங்காடு புல்வெளிகள், பகுதியளவு வறண்ட சூழல் சார்ந்த மேய்ச்சல் நிலங்கள் மற்றும் வறண்ட நிலங்கள் ஆனது தமிழ்நாட்டில் இந்த இனத்திற்கானப் பொருத்தமான வாழ்விடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன.