மத்திய இந்தியாவின் நர்மதா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள லேமென்ட்டா நில அமைப்பில் சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுப் பணியில், டைட்டானோசர் இனங்களின் 92 முட்டையிடும் தளங்களைக் கண்டறியப்பட்டுள்ளது.
அவை உலகில் இதுவரை வாழ்ந்த டைனோசர்களில் மிகப் பெரியவையாக கருதப் படுகின்றன.
இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த டைட்டானோசர் இனங்களைப் பற்றிய முக்கியமான விவரங்களை வெளிப்படுத்தச் செய்யும் 250க்கும் மேற்பட்ட புதைபடிவ முட்டைகளை அக்குழு கண்டுபிடித்துள்ளது.
இந்தப் புதைபடிவங்கள் பிற்கால கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் ஆறு வெவ்வேறு "ஓஸ்பீசிஸ்" (புதைப்படிவமாக்கப்பட்ட) அல்லது முட்டை இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.