பூனைப் பாம்பு அல்லது பொய்கா ட்ரைகோனாட்டா ஆனது, மற்ற பாம்பு இனங்களைக் காட்டிலும் மிகவும் குறைவான நச்சுத் தன்மை உடையது மற்றும் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.
பீகாரில், அந்த மாநிலத்தின் ஒரே புலிகள் வளங்காப்பகமான வால்மீகி புலிகள் வளங் காப்பகத்தில் இந்த காண்பதற்கு அரிதான பாம்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் கண்கள் பூனையின் கண்களை ஒத்திருக்கும்.
இந்தப் பாம்புகளானது இரவு நேரங்களில் மிக அதிகம் செயல்படக் கூடியவை மற்றும் அதன் விஷம் ஆனது பல்லிகள், தவளைகள், எலிகள் மற்றும் பறவைகள் போன்ற சில உயிரினங்களுக்கு மட்டுமே ஆபத்தானது.