TNPSC Thervupettagam

அரிவாள் வடிவ உயிரணு இரத்தசோகை நோய்க்கான மரபணு சிகிச்சை

November 22 , 2023 241 days 163 0
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்தசோகை நோய் மற்றும் இரத்த அழிவு சோகை (தலசீமியா) ஆகியவற்றிற்கான உலகின் முதல் மரபணு சிகிச்சை முறைக்கு ஐக்கிய பேரரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் மற்றும் தலாசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு காஸ்கேவி மருந்தினை வழங்க அங்கீகரித்துள்ளது.
  • காஸ்கேவி மருந்தானது, வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் (ஐரோப்பா) லிமிடெட் மற்றும் CRISPR தெரபியூட்டிக்ஸ் ஆகியவற்றினால் தயாரிக்கப்படுகிறது.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் மற்றும் தலாசீமியா ஆகிய இரண்டு பாதிப்புகளும், ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தைச் சுமக்கும் மரபணுக்களில் ஏற்படும் பிழைகளால் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்