இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
இது அருகி வரும் உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் தேசிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகளை அங்கீகரிக்கின்றது.
அருகி வரும் உயிரினங்கள் என்பது சுற்றுச்சூழலின் நேரடி அல்லது புவியியல் மற்றும் உயிரியியல் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் காரணமாக அழியும் நிலையில் உள்ள உயிரினங்களைக் குறிக்கின்றது.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்பு தரவுப் பட்டியலானது, மிகப் பரந்த அளவிலான அருகிவரும் இனங்களை உள்ளடக்கியுள்ளது
IUCN-ன் கூற்றுப் படி, அருகிவரும் இனங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவையாவன
கடந்த 10 ஆண்டுகளில் அந்த இனத்தின் எண்ணிக்கையில் 50-70% குறைதல்.
மொத்தப் புவியியல் வாழிடப் பகுதியானது 5000 சதுர கிலோ மீட்டருக்குக் குறைவாக அல்லது உள்ளூர் உயிரின எண்ணிக்கையின் வாழிடப் பரப்பானது 500 சதுர கிலோ மீட்டருக்குக் குறைவாக இருத்தல்.
ஒரு இனத்தின் பதின்ம வயது எண்ணிக்கையானது 2500ற்குக் குறைவாக இருத்தல்.
கட்டுப்படுத்தப்பட்ட பதின்ம வயது இனத்தின் எண்ணிக்கை 250 அல்லது அடுத்த 20 ஆண்டுகளுக்குள் அந்த இனம் அழியப் போகும் என்ற புள்ளியியல் கணிப்பு.