அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரான பேமா காண்டு அருணாச்சல் எழுச்சிப் பிரச்சாரத்தை (Arunachal Rising Campaign) அண்மையில் துவக்கி வைத்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைவதும், குறிப்பாக மாநிலத்தின் தொலைதூரக் கடைக்கோடிப் பகுதிகளை இலக்கிட்டு அம்மக்களைச் சென்றடைவதும், அரசின் தொடக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் பற்றி விழிப்புணர்வுடையோராக அவர்களை மாற்றுவதும் இப்பிரச்சாரத்தின் நோக்கங்களாகும்.