அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தனித்துவமிக்க பன்னிரண்டுத் தயாரிப்புகள் புவி சார் (GI) குறியீடுகளைப் பெற்றுள்ளன.
அந்தத் தயாரிப்புகள் அபதானி, மோன்பா, ஆதி, கலோ, தை காம்டி மற்றும் நைஷி ஜவுளித் துறை, மோன்பா கைவினை காகிதம், சிங்போ ஃபலாப் (சிங்போ தேயிலை), ஆதி அபோங், டாவ் (மச்சீட்), அங்கன்யாட் சிறு தானியம் மற்றும் மருவா அப்போ (மருவா சிறு தானிய பானம்) ஆகியனவாகும்.
தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியானது இந்தப் புவிசார் குறியீட்டுப் பதிவு செயல்முறையை தீவிரமாக ஆதரித்துள்ளது.
அம்மாநிலத்தில், தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியால் அங்கீகரிக்கப் பட்ட மொத்தம் 18 தயாரிப்புகள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.