தேசிய மலையேறுதல் மற்றும் சாகச விளையாட்டுக் கழகத்தின் (NIMAS) 15 பேர் கொண்ட குழுவானது அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்-மேற்கு கமெங் பகுதியில் இதுவரை ஏறப்படாத சிகரத்தில் ஏறியுள்ளது.
6வது தலாய் லாமாவின் நினைவாக அதற்கு ‘சங்யாங் கியாட்சோ சிகரம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தச் சிகரமானது, அருணாச்சலப் பிரதேச இமயமலையின் கோரிசென் மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 6,383 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
ஆறாவது தலாய் லாமாவான சாங்யாங் கியாட்சோ, 1682 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தின் மோன் தவாங் எனுமிடத்தில் பிறந்தார்.
அவர் 1697 ஆம் ஆண்டில் தனது 14 வயதில் ஆறாவது தலாய் லாமாவாக பொறுப்பினை ஏற்றார்.
1706 ஆம் ஆண்டில், அவர் சீனாவுக்கு அழைக்கப்பட்டு, அங்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார்.
சீனா அரசானது அருணாச்சலப் பிரதேசத்தை ஜங்னான் என்று அழைக்கிறது.
மேலும், சீனா தனது உரிமைக் கோரல்களை உறுதிப்படுத்துவதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை 2017 ஆம் ஆண்டு முதல் மாற்றி வருகிறது.