TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசத்தில் வனேடியம்

January 16 , 2021 1319 days 461 0
  • வனேடியம் என்ற உலோகமானது அருணாச்சலப் பிரதேசத்தின் டெபோ மற்றும் தமாங் பகுதியில் உள்ள பேலியோ - புரோடெரோசோயிக் கார்பனேசியன் பயலைட் என்ற வகை பாறைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வனேடியத்தின் மீதான ஒரு முதன்மை இருப்பின் முதலாவது பதிவு அறிக்கை இதுவாகும்.
  • இந்த அகழாய்வானது இந்தியப் புவியியல் ஆய்வு அமைப்பினால் மேற்கொள்ளப் பட்டு உள்ளது.
  • வனேடியம் என்பது எஃகு மற்றும் டைட்டானியத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் உயர்மதிப்பு கொண்ட ஒரு உலோகமாகும்.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் காணப்படும் வனேடியத்தின் கனிமமயமாக்கல் என்பது புவியியல் ரீதியாக சீனாவின் வனேடியம் இருப்பான கார்பனேசிய ஷேல் வகை என்ற படிமத்தில் உள்ள”கல் நிலக்கரியை” போன்றதாகும்.
  • இந்த உயர் வனேடியப் பொருளானது 16% வரை நிர்ணயிக்கப்பட்ட கரிமப் பொருளுடன் உள்ள கிராபைட்டுடன் தொடர்புடையதாகும்.
  • வனேடியம் வகை எஃகு ஆனது பல்சக்கரங்கள் , மிதிவண்டிச் ச்ட்டங்கள், அச்சுகள் மற்றும் இதர முக்கியப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.
  • உலகில் உற்பத்தி செய்யப்படும் 85% வனேடியமானது எஃகு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்தியாவானது வருடாந்திரமாக 3360 மெட்ரிக் டன்கள் என்ற அளவில் வனேடியத்தை நுகர்கின்றது.
  • இது உலகினால் நுகரப்படும் வனேடியத்தின் அளவில் 4% அளவுடையதாகும்.
  • சீனாவானது உலக  வனேடியத்தில் 57% அளவை உற்பத்தி செய்து 44% வனேடியத்தை நுகர்கின்றது.
  • சீனாவில் அதிக வனேடியம் இருப்புகள் உள்ளன, இதற்கு அடுத்து ரஷ்யா  மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அதிக அளவில் வனேடியம் இருப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்