அருணாச்சலப் பிரதேசமானது சர்ச்சைக்குரியப் பகுதி அல்ல, அது இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதி என்று அங்கீகரிப்பது குறித்த ஒரு தீர்மானமானது அமெரிக்க மேலவையில் நிறைவேற்றப்பட்டது.
இது "மெய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிலவும் தற்போதைய நிலையை மாற்றச் செய்வதற்காக சீனா மேற்கொண்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பையும்" கண்டனம் செய்தது.
சீனாவிற்கும் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்திற்கும் இடையிலான ஒரு சர்வதேச எல்லையாக மெக்மஹோன் எல்லைக் கோடு திகழச் செய்வதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை இந்தத் தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
1914 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன் மற்றும் திபெத் ஆகியவை இந்த எல்லை வரையறைக்கு ஒப்புதல் அளித்தன.