அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வரான பேமா காண்டு (Pema Khandu) மாநிலத் தலைநகரான இட்டா நகரில் உள்ள ஆற்றல் விழிப்புணர்வு பூங்காவில் (Energy Awareness Park) மாநிலத்தின் மிகப்பெரிய சூரியஒளி மின் நிலையத்தை (solar power plant) துவக்கி வைத்துள்ளார்.
இந்த மின் நிலையத் திட்டமானது அருணாச்சலப் பிரதேச ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Arunachal Pradesh Energy Development Agency-APEDA) அமல்படுத்தப்பட்டுள்ளது.
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana-DDUGJY) திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் ஊரக மின் இணைப்பிற்காக (rural electrification) மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை முழுமைப்படுத்துவதனை நோக்கி அருணாச்சலப் பிரதேசம் செயல்பட்டு வருகின்றது.