TNPSC Thervupettagam

அருந்ததியர்களின் சிறப்பு இட ஒதுக்கீட்டு சலுகைகள்

January 19 , 2025 3 days 64 0
  • 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அருந்ததியர் இட ஒதுக்கீட்டுச் சட்டமானது பட்டியலிடப் பட்ட சாதியினரிடையே (SCs) அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
  • இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்காக அரசியலமைப்பின் 341வது சரத்தின் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட 76 பட்டியலிடப்பட்டச் சாதியினர் பட்டியலில் உள்ள அருந்ததியர், சக்கிலியன், மதரி, மடிகா, பகடி, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய ஏழு சாதிகள் பொதுவாக அருந்ததியர்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இது பட்டியலிடப்பட்டச் சாதியினருக்கான 18% ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2018-19 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் MBBS படிப்பில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை சுமார் 82% அதிகரித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் இருந்து இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS) படிப்பில் இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 3% ஆக உயர்ந்துள்ளது.
  • 2009-10 ஆம் ஆண்டில் பொறியியல் படிப்புகளின் சேர்க்கையில் 1,193 ஆக இருந்த ​​பட்டியலிடப் பட்ட சாதியினர் - அருந்ததியர் (SC (A)) மாணவர்களின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 3,944 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்