தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் இந்தியாவின் 68வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
இவர் செர்பியாவில் நடைபெற்ற “ராபின் ருஜ்னா சோர் – 3” என்ற கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான 5வது சுற்றில் டிராகன் கோசிக் என்பவரை வீழ்த்தி 2500 ELO (Chess rating) வரம்பினை கடந்து இப்பட்டத்தை வென்று உள்ளார்.
IM சரவணன் மற்றும் ஒரு உக்ரேனிய கிராண்ட் மாஸ்டரான அலெக்சாண்டர் கோலோஷ்சாப்போவ் ஆகியோரிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றார்.
இவர் தனது 9வது வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்தில் FIDE (International Chess Federation) தர வரிசையில் இடம் பெற்றார்.
விஸ்வநாதன் ஆனந்த் 1988 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆகினார்.