TNPSC Thervupettagam
April 28 , 2019 1919 days 535 0
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI - Board of Control for Cricket in India) முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் பூனம் யாதவ் ஆகியோரை அர்ஜுனா விருதுக்காகப் பரிந்துரை செய்துள்ளது.
  • அர்ஜுனா விருதின் நோக்கமானது சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிப்பதாகும்.
  • இது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது.
  • இது 1961-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • அர்ஜுனா விருதினைப் பெற்ற முதலாவது கிரிக்கெட் வீரர் சலீம் துரானி ஆவார்.
  • இதுவரை 53 கிரிக்கெட் வீரர்கள் அர்ஜுனா விருதினைப் பெற்றுள்ளனர்.
விருதுக்கான தகுதி நிலைகள்
  • கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துதல்.
  • தலைமைத்துவப் பண்பு, விளையாட்டு வீரருக்குரிய தகுதி நிலைகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்.
  • எந்த ஒரு நபரும் இரண்டாவது முறையாக இந்த விருதினைப் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்