அர்ஜென்டினாவில் உள்ள லித்தியம் மற்றும் தாமிரச் சுரங்கம்
January 9 , 2023 560 days 307 0
சாத்தியக் கூறுகள் மிக்க கையகப் படுத்துதல் அல்லது நீண்ட கால குத்தகைப் பணிகளுக்காக அர்ஜென்டினாவில் உள்ள இரண்டு லித்தியச் சுரங்கங்கள் மற்றும் ஒரு தாமிரச் சுரங்கம் ஆகியவற்றினை இந்தியா அடையாளம் கண்டுள்ளது.
KABIL என்பது தேசிய அலுமினிய நிறுவனம் (Nalco), இந்துஸ்தான் காப்பர் (HCL) மற்றும் MECL ஆகியவற்றின் பங்கேற்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.
இது உள்நாட்டுச் சந்தையில் முக்கியமான மற்றும் மூலோபாயம் மிக்க கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக அளவிலான லித்தியம் உற்பத்தியில் அர்ஜென்டினா தற்போது 4வது இடத்தில் உள்ளது.
சிலி மற்றும் பொலிவியா ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த நாட்டின் வடமேற்குப் பகுதியானது "லித்தியம் முக்கோணம்" என்று அழைக்கப்படுகிறது.
உலக அளவிலான லித்தியம் உற்பத்தியில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில் சாலார் என்று அழைக்கப் படுகிற இந்த லித்தியம் ஆனது செடெமைன் பாறை உருவாக்கம் மற்றும் உப்புக்கல் வடிவில் காணப் படுகிறது.