அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவின் கடற்கரையில் பல அரிதான அர்னோக்ஸின் மூக்கு திமிங்கலங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த திமிங்கலங்கள் பல தசாப்தங்களாக தென்படவில்லை.
அவை அவற்றின் திறமிக்க நீச்சல் திறன்களுக்குப் பெயர் பெற்றவை மற்றும் சுமார் 30 அடி நீளம் கொண்டவையாகும்.
1988 மற்றும் 2018 காலக் கட்டத்திற்கு இடையில் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட 11 கண்காணிப்பு பயணங்களில், அறிவியல் ஆய்வாளர்கள் ஒருபோதும் இந்தத் திமிங்கலங்களைக் காணவில்லை.
1851 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட இவை மிகப் பெரும்பாலும் தென் அரைக் கோளத்தில் காணப்படுகின்ற காண்பதற்கு அரிய கடல் வாழ் விலங்குகள் ஆகும்.