அர்மேனியா நாட்டின் பாராளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவரான நிக்கோல் பஷின்யானை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கு முன் பிரதமராக இருந்த செர்ஜ் சர்க்ஸ்யான் அரசுக்கு எதிரான நாடு தழுவிய புரட்சியின் காரணமாக ராஜினாமா செய்த இரு வாரங்களுக்குப் பிறகு நிக்கோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிக்கோல் பஷின்யானுக்கு ஆதரவாக ஐம்பத்தொன்பது வாக்குகளும் அவருக்கு எதிராக 42 வாக்குகளும் பதிவாகின.
கடந்த மாதம் அர்மேனிய நாடாளுமன்றமானது முன்னாள் குடியரசுத் தலைவரான, ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் செர்ஜ் சர்ஜ்ஸ்யானை பிரதமராக காலவரையின்றி நியமித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் அரசுக்கெதிரான போராட்டங்கள் வெடித்தன.