ஒடிசாவின் தொலைதூரப் பகுதிகளில் முதன்மையாக பேசப்படும் வால்மீகி மற்றும் மல்ஹர் என்ற இரண்டு அருகிவரும் மொழிகளை ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மொழியியலாளர் கண்டறிந்துள்ளார்.
இந்த மையத்தின் அருகி வரும் மொழிகள் மற்றும் தாய்மொழி ஆய்வுகள் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மொழிகள், பேராசிரியர் பஞ்சனன் மொகந்தியால் கண்டுபிடிக்கப்பட்டன.
வால்மீகி மொழி ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்திலும் அதன் அருகில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களிலும் பேசப்படுகின்றது. இது ஒரு தனித்த, எந்த ஒரு மொழிக் குடும்பத்திலும் சேராத மொழியாகும்.
மல்ஹர் மொழி ஒடிசாவின் புவனேஸ்வர் நகரத்தில் இருந்து 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனித்த குக்கிராமப் பகுதிகளில் பேசப்படுகின்றது.
மல்ஹர் திராவிட மொழிக் குடும்பத்தின் வடக்கு துணைப் பகுதியைச் சேர்ந்ததாகும்.
இது வடக்கு திராவிட மொழிகளான, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் பேசப்படும் மால்டோ மற்றும் குருக்ஸ் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டு இருக்கின்றது.