இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் உலக வானிலை ஆய்வு அமைப்பினால் தொகுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு உமிழ்வுகளுக்கான இறுதி அளவானது 2019 ஆம் ஆண்டை விட 4–7% குறைவாக இருக்கும் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
2100 ஆம் ஆண்டுவாக்கில் உயர்ந்து வரும் உலக வெப்பத்தை தொழில் துறை வளர்ச்சிக்கு முந்தைய அளவில் 2oசெல்ஷியஸ் என்ற அளவிற்குக் குறைப்பதற்காக பசுமை இல்ல உமிழ்வுகளானது ஒவ்வொரு ஆண்டும் 5% என்ற அளவில் குறைய வேண்டும்.
2020 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், உலக வெப்ப நிலையானது பல்வேறு மாதங்களில் உச்சபட்ச வெப்பநிலையான 1.5o செல்ஷியஸைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
முக்கியமான பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் அதிகரித்து வருகின்றன.
2019 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகளினால் ஏற்பட்ட CO2உமிழ்வுகள் மட்டும் 42 பில்லியன் டன்களாகும்.
ஒட்டு மொத்தமாக, 2020 ஆம் ஆண்டு உமிழ்வுகளானது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப் படும் போது 4% - 7% என்ற அளவிற்குக் குறையும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
உலக புதைபுடிவ CO2 உமிழ்வுகளானது 2019 ஆம் ஆண்டில் மிக உயரிய அளவாக 36.7 ஜிகா டன்களாக பதிவாகியுள்ளது. இது 1990 ஆம் ஆண்டை விட 62% அதிகமாகும்.
2016-2020 என்ற 5 ஆண்டு காலக் கட்டமானது தொழில்துறை வளர்ச்சிக்கு முன்பு இருந்த வெப்பநிலையை விட அதிகமாக, 1.1o செல்ஷியஸ் என்ற சராசரி உலக வெப்பநிலையுடன் மிக வெப்பமானதாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலையைத் தொழில்துறை வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட 2o செல்ஷியஸ் என்ற அளவிற்குக் குறைப்பதற்காக வேண்டி 2030 ஆம் ஆண்டில் உமிழ்வுகள் இடைவெளியானது 12-15 CO2 ஜிகா டன்களாக இருக்கப் பட வேண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.