TNPSC Thervupettagam

அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருது

April 10 , 2021 1203 days 655 0
  • பேராசிரியர் சுமன் சக்கரபர்த்தி, அறிவியல் ஆராய்ச்சிக்கான 30வது GD பிர்லா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பொறியியல் அறிவியல் மற்றும் கட்டுப்படியாகக் கூடிய சுகாதார வசதிகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் அதன் பயன்பாடு ஆகியவற்றிற்காக அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் கரக்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றும் ஒரு ஆசிரியராவார்.
  • அறிவியல் அல்லது தொழில்நுட்பத்தின் எந்த ஒரு பிரிவிலும் மூலதன மற்றும் சிறப்பான பங்களிப்பினை ஆற்றும் 50 வயதிற்கு கீழ் உள்ள சிறந்த இந்திய அறிவியலாளர்களை அங்கீகரிப்பதற்காக அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருது வழங்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்