TNPSC Thervupettagam
March 27 , 2018 2436 days 1082 0
  • கிருஷ்ணசாமி விஜய் ராகவன், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2001 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட, 81 வயதாகும் அணு இயற்பியலாளர் சிதம்பரத்தைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி விஜய் ராகவன் இப்பொறுப்பை வகிக்க உள்ளார். R. சிதம்பரம் 16 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பதவி வகித்தார்.
  • உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ராகவன், 2013 ஆம் ஆண்டு உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

முதன்மை அறிவியல் ஆலோசகர்

  • முதன்மை அறிவியல் ஆலோசகர் எனும் பதவி, 1999 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயி அரசினால் உருவாக்கப்பட்டது. இது அறிவியல் கொள்கை தொடர்பாக அனைத்து செயல்களிலும் அரசிற்கு ஆலோசனை வழங்கும் மிக உயர்ந்த பதவியாகும்.
  • அறிவியல் தொடர்பான செயல்பாடுகளில் அரசிற்கு ஆலோசனை வழங்கும் மூன்று அறிவியல் அங்கங்களில் ஒன்றான முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியானது அரசு மற்றும் அறிவியல் கழகங்களுக்கிடையேயான இடைமுகமாக செயல்படுகிறது.
  • மற்ற இரண்டு அங்கங்களாவன,
    • பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு
    • கேபினேட்டிற்கான அறிவியல் ஆலோசனைக் குழு
  • மேற்கண்ட இரண்டும் அரசின் செயல்பாட்டின் கீழ் இல்லை.
  • பாதுகாப்புத்துறை அமைச்சர், அவருக்கென்றுத் தனியாக ஒரு அறிவியல் ஆலோசகரைக் கொண்டுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்