கிருஷ்ணசாமி விஜய் ராகவன், இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட, 81 வயதாகும் அணு இயற்பியலாளர் சிதம்பரத்தைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி விஜய் ராகவன் இப்பொறுப்பை வகிக்க உள்ளார். R. சிதம்பரம் 16 ஆண்டுகளுக்கு மேலாக முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பதவி வகித்தார்.
உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தின் இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ராகவன், 2013 ஆம் ஆண்டு உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
முதன்மை அறிவியல் ஆலோசகர்
முதன்மை அறிவியல் ஆலோசகர் எனும் பதவி, 1999 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயி அரசினால் உருவாக்கப்பட்டது. இது அறிவியல் கொள்கை தொடர்பாக அனைத்து செயல்களிலும் அரசிற்கு ஆலோசனை வழங்கும் மிக உயர்ந்த பதவியாகும்.
அறிவியல் தொடர்பான செயல்பாடுகளில் அரசிற்கு ஆலோசனை வழங்கும் மூன்று அறிவியல் அங்கங்களில் ஒன்றான முதன்மை அறிவியல் ஆலோசகர் பதவியானது அரசு மற்றும் அறிவியல் கழகங்களுக்கிடையேயான இடைமுகமாக செயல்படுகிறது.
மற்ற இரண்டு அங்கங்களாவன,
பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு
கேபினேட்டிற்கான அறிவியல் ஆலோசனைக் குழு
மேற்கண்ட இரண்டும் அரசின் செயல்பாட்டின் கீழ் இல்லை.
பாதுகாப்புத்துறை அமைச்சர், அவருக்கென்றுத் தனியாக ஒரு அறிவியல் ஆலோசகரைக் கொண்டுள்ளார்.