உலக அறிவியல் வெளியீடுகள் மற்றும் அறிவுசார் வெளியீடுகளில் 7வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அதிக பட்ச அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் சீனா முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் வெளிவரும் ஆய்வறிக்கைகளின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.