அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE- Centre for Science and Environment) மூலம் மேற்கொண்ட நகர்ப்புற பயணம் (The Urban Commute) என்ற ஆய்வில் போபால் நகரமானது குறைந்த உமிழ்வு மற்றும் ஆற்றல் பயன்பாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து மற்றும் நடைப்பயணத்தின் அதிகப் பயன்பாட்டின் காரணமாக கொல்கத்தாவானது 6 மிகப்பெரிய நகரங்களில் மிகக் குறைந்த உமிழ்வைக் கொண்டுள்ளது.
அதிக ஒட்டுமொத்த உமிழ்வு மற்றும் எரிபொருள் பயன்பாட்டின் காரணமாக டெல்லியின் தரம் கீழிறங்கியுள்ளது.
இந்த ஆய்வு 14 நகரங்களில் கீழ்க்காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.
வெப்பத்தை வெளியேறாமல் பிடித்து வைக்கும் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு
நுண்துளைப் பொருள்கள் போன்ற நச்சு மாசுக்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு
நகர்ப்புற பயணத்தின் போது எரிக்கப்படும் சக்தி
ஒட்டு மொத்த உமிழ்வு மற்றும் எரிபொருள் நுகர்வில் முதல் 3 இடங்கள்
போபால்
விஜயவாடா
சண்டிகார்
ஒரு முறை பயணத்தில் ஏற்படும் உமிழ்வு மற்றும் ஆற்றல் நுகர்வில் முதல் 3 இடங்கள்